சங்கானை பிரதேச செயலகத்தின் வருடாந்த பனை மர நடுகைத்திட்டமானது 2023.10.31 அன்று சுழிபுரம் மேற்கு (J/172), பொன்னாலை (J/170), மூளாய் (J/171) கிராமங்களில் இடம்பெற்றதுடன் இத் திட்டத்தின் கீழ் 5000 பனை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.அன்றைய தினம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி பிரதேசத்தில் 350 தென்னங்கன்றுகள் மற்றும் 50 நிழல் தரும் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.

இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் புதிதாக தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் தனது முதலாவது களப்பயணத்தினை மேற்கொண்டு இந் நிகழ்வினை சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் கிளையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இக் கிராம சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்திகழ்வின் பதிவுகள் சில...

11.0111.01 311.01 4

11.01 611.01 711.01 8

IMG DS PP      IMG 20231027 WA0000

இதுவரை சங்கானை பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்கள் 2023.10.23 அன்றிலிருந்து இடமாற்றம் பெற்று செல்வதோடு புதிய பிரதேச செயலாளராக திருமதி கவிதா உதயகுமார் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இடமாற்றம் பெற்றுச்செல்லும் மதிப்பார்ந்த பிரதேச செயலாளர் திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்களை நன்றியுடன் பாராட்டி எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதோடு எமது புதிய பிரதேச செயலாளர் அவர்களின் பணிகள் சிறப்புறவும் சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளகின்றோம்!

 

aswasuma

அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்துவிதமான நலன்புரி கொடுப்பனவுகளும் கீழ் காணப்படும் விதி முறையின் கீழ் இனி வழங்கப்படும்.

அந்த வகையில் புதிய கொடுப்பவு பற்றிய முறைகளை மக்கள் சரியாக அறியாதிருப்பதால் கீழே உள்ள தகவலை முழுமையாக வாசித்து அறியவும்.
 
நலன்புரி நன்மைகள் சபை உதவி கொடுப்பனவு என இது இனி அழைக்கப்படும்.
 
அரசாங்கத்தின் நலன்புரி நன்மைகள் சபையின் உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியுடைய பயனாளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலை நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும்.
 
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியில் தெரிவு செய்யப்பட்ட குடும்ப விபரங்களை உங்கள் கிராம சேவகர் பிரிவை தெரிவு செய்வதன் மூலம் பார்வையிட முடியும்.
 
 
- வழங்கப்படவிருக்கின்ற உதவித்தொகை விபரம்:
 
1. மிக வறுமை (Severely Poor) - மாதாந்தம் ரூ. 15,000.00
2. வறுமை (Poor) - மாதாந்தம் ரூ. 8,500.00
3. பாதிப்புக்கு உள்ளானோர் (Vulnerable) - மாதாந்தம் ரூ. 5,000.00
4. நிலையற்ற வருமானம் (Transient) - மாதாந்தம் ரூ. 2,500.00
 
***********
- உதவித் தொகை பெறுவதற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் / தகுதியின்றி தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேன்முறையீடு 10.07.2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
 
Online முறையின் மூலம் மேன்முறையீட்டு / ஆட்சேபனைகளை, 
எனும் இணைய முகவரிக்கு சென்று தெரிவிக்க முடியும்.
 
அல்லது,
மேன்முறையீட்டு / ஆட்சேபனை மாதிரி படிவத்தினை,
எனும் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து, படிவத்தினை பூரணப்படுத்தி அனுப்ப வேண்டும்.
 
அல்லது,
 
1924 என்கின்ற நலன்புரி நன்மைகள் சபையின் விரைவு தொடர்பு எண்ணுக்கு (Hotline) அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்கமுடியும்.

 

dcs

 

2023/24 இல் 15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2023 இன் பிற்பகுதியில் தொடங்கும். அதைத் தொடர்ந்து 2024 இல் கணக்கெடுப்பு கட்டம் தொடங்க உள்ளது.இந்த ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2023.10.13 தொடக்கம் நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் குறிப்பிடத்தக்க அம்சம், தரவு சேகரிப்பிற்காக பாரம்பரிய அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டேப்லெட் கணினிகளை இணைத்துள்ளது. 150 ஆண்டுகளுக்கும்மேலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைகிறது.

மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் ஒரு நாட்டிற்குள் இருக்கும் அனைத்து தனிநபர்கள் மற்றும் தற்போதுள்ள குடியிருப்புகளின் விரிவான எண்ணிக்கையை உள்ளடக்கியது. எந்தவொரு நபரும் அல்லது குடியிருப்பும் தவிர்க்கப்படுவதை அல்லது இரண்டு முறை கணக்கிடப்படுவதை செயல்முறை உறுதி செய்கிறது. மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு கிராம அலுவலர் பிரிவு மட்டம் வரை மக்கள் தொகை மற்றும் வீட்டுத் தகவல்களைப் பெறுவதற்கான அதிகாரப்பூர்வ தரவுகளின் முக்கிய ஆதாரமாகும்.

இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, சுமார் 16,000 அரசுத் துறை ஊழியர்கள் கணக்கெடுப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள், பட்டியலிடப்பட்ட நிலையில் ஏற்கனவே பிரதேச செயலக மட்டத்தில் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

sllogo

 

23.06.2023 வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஜனசபை செயலகத்தினால் ஜனசபை முறை தொடர்பில் நிகழ்நிலை (Zoom) ஊடாக தெளிவுபடுத்தல் செயலமர்வு நடைபெற்றது.இவ் செயலமர்வில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்(அபிவிருத்தி) மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News & Events

10
ஆக2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
ஆக2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
ஆக2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
ஜூலை2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
ஜூலை2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
ஜூன்2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top