வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்றைய தினம் சுழிபரம் மேற்கு கலைமகள் இலவசக் கல்வி நிலையத்தில் நடைபெற்றது .
அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. 
அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும், அரசின் நேர்மை வாரம் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 
இந்நிகழ்வில் மாணவர்களில் ஒருவரால் நேர்மையின் முக்கியத்துவம் குறித்து மிகவும் சிறப்பான உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும், நேர்மை போன்ற உயரிய பண்புகளையும் ஊக்குவிக்கும் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.
 
 s1.1s1.2s1.3s1.4
வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின் இரண்டாவது நாள் விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் இடம் பெற்றது.
சமூக சேவை கிளை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் சங்கானை பஸ் தரிப்பு நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் 
நேர்மை வாரம் தொடர்பான பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன
p1p2p3p4
இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் கிளீன் சிறீலங்கா தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து அரசசேவையின் நெறிமுறை விழுமியங்களை வலுப்படுத்துவதற்காக தேசிய நேர்மை வாரம் நிகழ்ச்சித்திட்டம் ஜூலை 27- ஜூலை 31 நடைமுறைப்படுத்தப்படுகிறது.
 
பொதுமக்கள் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கி நெறிமுறை விழுமியங்கள் மற்றும் கொள்கை ரீதியான தரங்களுடன் ஒன்றிணைந்து யாரும் பார்க்காத போதும் எந்தவொரு மேற்பார்வையும் இல்லாதபோதும் தனக்குத்தானே சுய கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளும் கனிவான சேவையினை வழங்கும் உத்தியோகத்தர்களை உருவாக்கும் பின்னணியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
 
இன்றைய தினம் (27.07.2026) காலை 8.50 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தில் நேர்மை வாரத்தினை பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களால் ஆரம்பித்து வைத்தார்.
 
இந் நிகழ்வில் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி இலக்கியா ஜெயகரன்,நிர்வாக கிராம அலுவலர் k.கணேசலிங்கம்,சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இ.ரவிராஜ் ஆகியோர் நேர்மை வாரம் தொடர்பான கருத்துக்களை வழங்கினர்.
 
இன்றைய நாள் நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள். இதன் கருப்பொருள் "சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை" ஆகும்.
மேலும் உத்தியோகத்தர்களின் நலன்கருதி நேர்மை வார மூலையும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
 
cs1cs2cs3cs4cs5cs6cs7cs8
தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி
யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது
 
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி இன்று (28.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலிருந்தும், கெளரவ ஆளுநர் செயலகத்திலிருந்தும் சமநேரத்தில் ஆரம்பமாகியது.
 
இந் நடைபவனியில் - மாவட்டச் செயலகத்திலிருந்து  மாவட்டச செயலக உத்தியோகத்தர்கள், வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தினர், பொலிஸ் மற்றும் முப்படையினரும், அதேவேளை கெளரவ ஆளுநர் செயகத்திலிருந்து ஆளுநர் செயலகம்,  பிரதம செயலாளர் செயலகம், மாகாண அமைச்சு மற்றும் மாகாண திணைக்கள உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள். 
 
இவ் நடைபவனியில் வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பிரதம  செயலாளர் திருமதி தனுஜா முருகேசு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், பிரதிப் பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு.எஸ் கபிலன் அவர்களும்  கலந்துகொண்டார்கள். 
 
மேலும், இந் நடைபவனி மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஆரம்பமாகி -  வைத்தியசாலை வீதி ஊடாக வேம்படி சந்தியை அடைந்து, அங்கிருந்து முதலாம் குறுக்குத் தெரு வழியாக பிரதான வீதியைச் சென்றடைந்து, பஸ்ரியான் சந்தி மற்றும் கண்டி வீதி ஊடாக மீண்டும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் ஆளுநர் செயலகத்தை காலை 10.00 மணியளவில் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 1 22 23 24 2

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது 

 
PSDG நிதித் திட்டத்தின் கீழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாமானது அண்மையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 
 
இம்மருத்துவ முகாமில் இரத்த பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
 
இம் முகாமில் பிராந்தி வைத்திய அதிகாரி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சங்கானை பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 Med Camp 1Med Camp 2Med Camp 3Med Camp 4Med Camp 5Med Camp 6Med Camp 7Med Camp 8

News & Events

10
ஆக2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
ஆக2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
ஆக2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
ஜூலை2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
ஜூலை2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
ஜூன்2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top