தேசிய அடையாள அட்டைப் பகுதி
- தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு அத்தியாவசியமான ஆவணங்கள் எவை ?
a. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் அல்லது உத்தேச வயதெல்லைச் சான்றிதழுடன் தேடுதல் விளைவும்
b. திருமண அத்தாட்சிப்பத்திரம் (திருமணமான பெண்கள்)
c. புகைப்படம் 03
d. தபாலுறையுடன் 45 ரூபா பெறுமதியான முத்திரை.
- தேசிய அடையாள அட்டையில் திருத்தம் செய்வதாயின் தேவையான ஆவணங்கள் எவை ?
a. பிறப்புஅத்தாட்சிப்பத்திரம்
b. திருமண அத்தாட்சிப்பத்திரம் ( திருமணமான பெண்களுக்கு )
c. புகைப்படம் 03
d. தபாலுறையுடன் 45 ரூபா பெறுமதியான முத்திரை.
3. தேசிய அடையாள அட்டை தொலைந்து, இணைப்பிரதி பெறுவதாயின் தேவையான ஆவணங்கள் ?
a. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
b. திருமண அத்தாட்சிப்பத்திரம் (திருமணமான பெண்களுக்கு)
c. புகைப்படம் 03
d.தபாலுறையுடன் 45 ரூபா பெறுமதியான முத்திரை.
e. பொலிஸ் முறைப்பாட்டறிக்கை
f. அடையாள அட்டை இலக்கம் ஆவணப்படுத்தப்பட்ட ஆவணம்
(வங்கிப் புத்தகப் பிரதி, அடையாள அட்டைப் பிரதி,
வாக்காளர் பதிவேட்டுப் பிரதி, சாரதி அனுமதிப்பத்திரம்)
4. பிறப்பத்தாட்சிப் பத்திரம் அற்ற,50 வயதிற்கு மேற்பட்ட,வாக்காளர் பதிவேட்டில் பெயர் இருக்கும் ஒருவர் செய்ய வேண்டியவை ?
a. பிறப்புக்கான தேடுதல் விளைவும்
b. கிராம அலுவலர்கடிதம்
c. சாதகக்குறிப்பு
d. பிள்ளையின் பிறப்பத்தாட்சிப்பத்திரம்.
5. தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் யாது ?
a. புதிய அடையாள அட்டை பெறுவதாயின் ரூபா 200.
பதிவு தாபல் கட்டனம் ரூபா 140.
b. திருத்தம் செய்வதாயின் ரூபா 500.
பதிவு தாபல் கட்டனம் ரூபா 140.
c. தொலைவிற்கான கட்டணம் ரூபா 1000.
பதிவு தாபல் கட்டனம் ரூபா 140.
d. 16 வயதைக்கடந்திருப்பின் தண்டப்பணம் ரூபா 2500.
6. இலங்கை இரட்டை பிரஜா உரிமை பெற்றவர்கள் தேசிய அடையாள அட்டை பெற வேண்டின் யாது செய்ய வேண்டும்?
a. குடியுரிமை சட்டம் 19(2)மற்றும் 19(30) ஆம் பிரிவுகளின் கீழ் குடியுரிமை பெற்றிருத்தல் வேண்டம்.
b. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் வாக்காளராக பதிவு செய்யப்பட வேண்டி அவசியமில்லை.
c. தற்காலிக வதிவிடத்தை உறுதிபடுத்தல் அவசியமானது.
d. தற்காலிக வதிவிடத்தை உறுதிபடுத்தகையில் குடும்பத்தலைவரிடம் எழுத்து மூலமான சாட்சியத்தை இணைத்தல் பொருத்தமானது.
குறிப்பு
தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடர்பான விளக்கங்களை
கிராம அலுவலகர்ளிடம் பெற்றுக்கொள்ள முடியும்
மோட்டார் போக்குவரத்துப் பகுதி
01) மோட்டார் வாகன உடமை மாற்றத்தினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் ?
மோட்டார் வாகனங்களின் பதிவுச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
02) சங்கானைப் பிரதேச செயலகத்தில், எந்த பிரதேச எல்லைக்குட்பட்ட வாகன வருமான உத்தரவுப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும்?
வடமாகாணத்திற்கு உட்பட்டவை
03) வாகன வருமான உத்தரவுப்பத்திரம் தொலைந்தால், மீண்டும் பெற்றுக் கொள்ள யாது செய்ய வேண்டும் ?
பொலிஸ் அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்
04) உடமை மாற்றம் செய்த வாகனங்களின் வாகனப் பதிவுச்சான்றிதழ் கிடைக்கும் வரைக்கும் தற்காலிக வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படுமா ?
ஆம்
05) வரி முடிவுத் திகதி முடிவடைந்து எத்தனை நாட்களின் பின்னர் ஒருவர் வரி செலுத்துவராயின் தண்டப்பணம் அறவிடப்படும் ?
மூன்று நாட்களின் பின்னர்
06) எந்த காலத்திற்கு(ஆண்டு) முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட வாகனத்திற்கு வாகன புகை பரீட்சித்தல் பத்திரம் தேவைப்படுவதில்லை ?
1975ஆம் ஆண்டுக்கு முன்னர் உற்பத்தி செய்த வாகனங்கள்.
07) வரி முடிவுத் திகதிக்கு முன்னர் 15 நாட்கள் இருப்பின் வரியினை செலுத்த முடியுமா ?
ஆம் (முடிவுத்திகதிக்கு முன்னர் 15 நாட்களில் இருந்து செலுத்த முடியும்)
08) சங்கானைப் பிரதேச செயலகத்தில் எந்தநேரங்களில் வரி அனுமதிப்பத்திரத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது வழங்கப்படும் ?
அலுவலக நாட்களில் - மு.ப 08.30 தொடக்கம் பி.ப 03.00மணி வரை
09) காலவதியாகிய சாரதி அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் எவை?
a. மருத்துவச் சான்றிதழ்
b. தேசிய ஆளடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு
c. காலவதியான சாரதி அனுமதிப்பத்திரம்
d. வதிவிடச்சான்றிதழ் ( வதிவிடத்தை மாற்றுவதாயின் )
e. புதுப்பிப்பதற்கான கட்டணம்
பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவுகள்
மேலதிக மாவட்டப் பதிவகக் கிளையினால் வழங்கப்பட்டு வரும் சேவைகள் தொடர்பான விபரங்கள்
- இலங்கையில் எப்பாகத்திலும் நிகழந்த பிறப்புச் சான்றிதழ் பிரத , விவாகச்சான்றிதழ் பிரதி, இறப்புச் சான்றிதழ் பிரதி என்பனவற்றை சங்கானைப் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமா?
ஆம். சங்கானைப் பிரதேச செயலகத்தில் வடமாகாணத்தில் பதியப்பட்ட பிறப்பு, விவாக, இறப்பு பதிவுகளின் பிரதிகளை மட்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
- சங்கானைப் பிரதேசசெயலக எல்லைக்குள் வாசிப்பவர்கள் பிறப்பு ,விவாக, இறப்பு பதிவினை மேற்கொள்வதற்கானபதிவாளர் பிரிவுகள் எவை?
1..சங்கானை
2.வட்டுக்கோட்டை
- வைத்தியசாலையில் நடைபெற்ற பிறப்பு, இறப்பு எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்?
வைத்தியசாலை அறிக்கையுடன் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு மூன்று மாதங்களுக்குள் உரிய பிரிவுக்குரிய பதிவாளரிடம் பதிவினை மேற்கொள்ள வேண்டும்.
- வீட்டில் நடைபெறும் பிறப்பு,இறப்பினை எவ்வாறு பதிவு செய்யவேண்டும் ?
கிராம அலுவலரின் அறிக்கையினைப் பெற்று உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மூன்று மாதங்களுக்குள் உரிய பிரிவுக்குரிய பதிவாளரிடம் பதிவு செய்யவேண்டும்.
- மூன்று மாதங்களுக்குள் பதிவுசெய்யாத பிறப்பு, இறப்பினை பதிவு செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கை யாது?
சங்கானைப் பிரதேச செயலக பதிவகக்கிளையினை நாடி காலம் கடந்த பிறப்பு, இறப்பாக பதிவு செய்ய முடியும்.
- பிறப்பு ,விவாக, இறப்புசான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட வேண்டிய கட்டண விபரம்?
சான்றிதழ் இலக்கம் தெரிந்திருப்பின் ஒரு பிரதிக்கு கட்டணமாக 120 ரூபா.
சான்றிதழ் இலக்கம் தெரியாதிருப்பின் ஒரு பிரதிக்கு கட்டணமாக 250 ரூபா.
(தங்களால் வழங்கப்படும் ஆண்டில் இருந்து இரண்டு வருடதேடுதல் செய்யப்பட்டு 3 நாட்களுக்குள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்)
- காலம் கடந்த பிறப்பு, இறப்புச்சான்றிதழ் பதிவு செய்வதற்கு திருத்தம் செய்வதற்கு எவ்வளவு கட்டணம் அறவிடப்படுகிறது?
A. பதிவு செய்ய கட்டணமாக 60 ரூபா
B. திருத்தங்கள் செய்வதற்கு ஒவ்வொரு திருத்த படிவத்திற்கும் கட்டணமாக 60 ரூபா
- காலம் கடந்த பிறப்பை பதிவு செய்தல்காலம் கடந்த பிறப்பு ஒன்றைப் பதிவு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவை?
01. வைத்தியசாலைக் கடிதம்/சுகாதார அதிகாரியின் பிறப்பினை உறுதிப்படுத்திய கடிதம்
02. தேடுதல் விளைவு
03. பெற்றோரின் திருமணப் பதிவு
04. தகப்பனின் பிறப்புப் பதிவு/அடையாள அட்டை போட்டோப் பிரதி
05. தாயின் பிறப்புப் பதிவு/அடையாள அட்டை போட்டோப் பிரதி
06. பிள்ளைப் பட்டியல்;
07. நேர் மூத்த பிள்ளையின் பிறப்புப் பதிவு
08. நேர் இளைய பிள்ளையின் பிறப்புப் பதிவு
09. கிராம சேவகர் கடிதம்
10. பாடசாலைக் கடிதம் / பாடசாலை விடுகைப் பத்திரம்
11. சுகாதார வளர்ச்சிப் பதிவேடு
12. சாதகக் குறிப்பு / ஞானஸ்தானம்
13. சத்தியக் கடதாசி / வாக்கு மூலம்
- காலம் கடந்த இறப்பை ஒன்றைப் பதிவு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவை?
01. இறந்தவரின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் / தேசிய அடையாள அட்டை
02. தேடுதல் விளைவு
03. இறப்பிற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் வைத்தியசாலைக் கடிதம்/பதிவு செய்யப்பட்ட வைத்தியரின் கடிதம்.
04. வீட்டில் இறந்திருந்தால் இறப்பை உறுதிப்படுத்தி கிராம சேவகர் கடிதம்
05. மரண சடங்கில் கலந்து கொண்ட நண்பர்கள் / உறவினர்கள் இருவரின் கடிதம்.
06. இறப்பிற்கான காரணத்தையும், திகதியினையும் உறுதிப்படுத்தி பதிவு செய்யப்பட்ட டாக்டர் ஒருவரின் கடிதம்
07. மரணச்சடங்கின் போது அச்சிடப்பட்ட கண்ணீர் அஞ்சலி / பத்திரிகையில் மரண பிரசுரிப்பு / 31ம் நாள் நினைவு மலர்.
10. பிறப்பு இறப்பு விவாகப் பிரதிகளை தபால் மூலம் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?
எதாவது ஒரு பிரதேசசெயலகத்தில் அல்லது இலங்கைவங்கி கிளையில் “பதிவாளர் நாயகத்தின் புறக்கோட்டை, கிளைக் கணக்கு இல:- 7041650 என்ற
இலக்கத்திற்கு” வைப்பு செய்து பூரணப்படுத்திய தேடுதல் விண்ணப்ப படிவத்துடன் பற்றுச்சீட்டு மற்றும் கடிதஉறை, முத்திரை என்பவற்றினை
அனுப்பி வைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு:- சான்றிதழ் பதிவு இலக்கம் தெரிந்திருப்பின் பிரதி ஒன்றிற்கு ரூபா 120.00
சான்றிதழ் பதிவு இலக்கம் தெரியாதிருப்பின் பிரதி ஒன்றிற்கு ரூபா 250.00
ஓய்வூதியப் பகுதி
- எந்த ஓய்வூதியம் பெறுவோருக்கு புகையிரத ஆணைச்சீட்டு வழங்கப்படும்?
குடிசார் ஓய்வூதியம், விதவை அனாதைகள் ஓய்வூதியம்
- எந்த ஓய்வூதியம் பெறுவோர் அக்ரஹார காப்புறுதி திட்டத்திற்கு உரித்துடையவர்கள்?
சிவில் ஓய்வூதியம் பெறுவோருக்கு
- ஓய்வூதியம் பெறுவோருக்கு எத்தனை சோடி புகையிரத ஆணைச்சீட்டு வழங்கப்படும்?
3 சோடி ஆணைச்சீட்டுக்கள்
- ஓய்வூதியம் பெறுபவரில் தங்கி வாழ்வோருக்கு புகையிரத ஆணைச்சீட்டு வழங்க முடியுமா?
ஆம் வழங்க முடியும்.
(குறிப்பு:- தங்கி வாழ்வோர் வேலை அற்றவராகவும், திருமணம் செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்)
- எந்த ஓய்வூதியம் பெறுவோர் அக்ரஹார காப்புறுதித் திட்டத்துக்கு உரித்துடையவர்கள்?
01.01.2016 ம் ஆண்டிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள். (ஓய்வூதியச் சுற்றுநிருபம் இல: 04|2016)
- இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அக்ரஹார காப்புறுதி சுற்றறிக்கை இலக்கம் யாது?
(ஓய்வூதியச் சுற்றுநிருபம் இல: 04|2016)
- ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை யாரிடம் பெற்றுக்கொள்ள முடியும்?
பிரதேச செயலகத்தில் உள்ள அலுவலரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
( கணக்காளர், ஓய்வூதிய உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் )
அனுமதிகள்
- விலங்குகளை வாகனத்தில் ஏற்றி செல்வதற்கான அனுமதியினை பெற்றுக்கொள்ள தேவையான விடயங்கள்?
a. கிராம அலுவரால் சிபார்சு செய்யப்பட்டவிண்ணப்பப்படிவத்துடன்,
b. சுகாதார நிலமைச் சான்றிதழ்
c. விலங்கு உறுதிச் சீட்டு
d. விலங்குகளை கொண்டு செல்லும் வாகனங்களை சிபார்சு செய்வதற்கான சான்றிதழ் (கால்நடை வைத்தியரிடமிருந்து)
- மரம், விறகு, தளபாடம், மற்றும் ஏனைய பொருட்கள் ஏற்றி செல்வதாயின் செய்ய வேண்டியவை?
a. கிராம அலுவலரால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்,
b. மரம் தறிப்பதற்கான அனுமதிப்பத்திரம்
c. ஒரு தடவைக்கு ரூபா 173 கட்டணமாக அறவிடப்படும்
- பனை மரம் மற்றும் ஏனைய மரங்கள் தறிப்பதற்கான அனுமதி பெற்றுக்கொள்வதாயின் தேவையானவை?
a. பூரணப்படுத்தப்பட்ட கிராம அலுவலரால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்,
b. காணி உறுதி, வீட்டு வரைபடம் (வீடு கட்டுவதாயின்)
c.உயிருள்ள ஒரு பனைக்கு ரூபா 200 கட்டணமாக அறவிடப்படும் (பனை அபிவிருத்திச் சபையால்)














