அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

 
 அரச அதிபர் வெற்றி கிண்ணபோட்டித் தொடரில் கரப்பந்தாட்டப் போட்டியில் தொடர்ந்து சாதனை படைக்கும் சங்கானை பிரதேச செயலக அணியினர்.
 
நேற்று சனிக்கிழமை (04.07.2026), வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்ற அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 இறுதி நிகழ்வில் நடைபெற்றது.
 
இப் போட்டியில் சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி கரப்பந்தாட்டம்,முதலாம் இடத்தையும் கலப்பு வலைப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
 
வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
15 பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலகத்துடனான தரப்படுத்தலில் 2 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது
 
அரச அதிபர் வெற்றி கிண்ண போட்டிகள் தொடங்கியது முதல் 10 தடவைகள் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டிகளில் களம் இறங்கிய வலிகாமம் மேற்கு பிரதேச செயலக அணி 8 தடவைகள் அரச அதிபர் வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளது.
 
இதற்காக தமது திறமைகளை வெளிப்படுத்தி வரும் உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இனிவரும் காலங்களிலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.
 
DS Cup 1DS Cup 2DS Cup 3DS Cup 4DS Cup 5DS Cup 6DS Cup 7DS Cup 8
பிரதேச தொழில் சந்தை
135 பயன்பெற்றனர்
 
மனிதவலு வேலை வாய்ப்பு பணியகமும் சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் , காரைநகர் பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பிரதேச தொழில் சந்தையில் 135 தொழில் தேடுபவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
 
கடந்த 19 .6 . 2026 அன்று சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற மேற்படி தொழில் சந்தையில் பெருமளவு இளைஞர் ,யுவதிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் .
 
இந்நிகழ்வினை சங்கானை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி சிவகரன் பிரணவசொரூபி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
மேற்படி தொழிற்சந்தையில் பல பயிற்சி நிறுவனங்களும் தொழில் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
 JM1jm2jm3jm4jm5jm6jm7jm8
 
வலி.மேற்கு பிரதேச செயலகமும், உலக தரிசன நிறுவனத்தின் (World Vision) மதிநிலை மகளிர் திட்டமும் இணைந்து நடத்திய "சர்வதேச மகளிர் தின விழா - 2026" வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
“அவளின் போஷாக்கும் ஆரோக்கியமும் அவசியம்" எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு, இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது.
 
வலி ,மேற்கு சங்கானை பிரதேச செயலாளர் திருமதி. கவிதா உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம் அவர்களும், உலக தரிசன நிறுவனத்தின் பாலின சமத்துவம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆலோசகர் சவினி ஸ்ரீகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண கமல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் திருமதி. தெய்வநாயகி பிரணவன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சங்கானை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. பிரணவசொரூபி சிவகரன் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. இலக்கியா ஜெயகரன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
 
நிகழ்ச்சித் திட்டம்
விழாவானது, "அவளின் போஷாக்கும் ஆரோக்கியமும் அவசியம்" என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வுப் பேரணியுடன் ஆரம்பமாகி, அதனைத் தொடர்ந்து கண்காட்சி மற்றும் விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
மங்கல விளக்கேற்றல் மற்றும் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து, தலைமையுரை மற்றும் வரவேற்புரைகள் இடம்பெற்றன.
 
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, பெண்களின் போஷாக்கு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கருத்துப் பகிர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
மேலும், குழு நடனம், மகளிர் தின பிரகடனம் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன.
 
குறிப்பாக, யாழ்ப்பாணம் தோழமை நிறுவனத்தினால் “பாலினத் தடைகளை உடைத்து பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல்" எனும் தலைப்பிலான நாடகம் விழாவிற்கு மேலும் வலு சேர்த்தது.இறுதியாக நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது,
 
W1W2W3W4W5W6W7W8W9W10W11W12W13W14W15

வலி.மேற்கு பிரதேச

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
 
வலி. மேற்கு பிரதேச செயலர் பிரிவின் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று புதன்கிழமை (17.06.2026) பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமானது.
 
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான டாக்டர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா அவர்கள் தலைமை தாங்கினார் .
 
ஆரம்பத்தில் பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்கள் இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரைநிகழ்த்தியதுடன் இந்த கூட்டத்தில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் குறித்து விளக்கமளித்தார்.
 
தொடர்ந்து ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீபவானந்தராஜா இக்கூட்டத்தை தலைமை தாங்கி தொடர்ந்து நடாத்தினார்.
 
கடந்த கூட்ட அறிக்கை சமர்க்கப்பட்
டது.நடப்பு விவகாரங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திதிட்டங்கள் தொடர்பான நீண்ட சமர்ப்பணம் ஒன்றை பிரதேச செயலக உதவித்திட்ட பணிப்பாளர் திருமதி இலக்கியா ஜெயகரன் அவர்கள் வழங்கினார்.
 
அதன்போது கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
 
பொன்னாலை தொடக்கம் மாதகல் வரையான வயல்வெளிகள் மற்றும் தோட்டப்பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் தொல்லைகள் அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் விவசாயம் பயிர்கள் அழிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
 
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டனர்.
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இவ்விடயம் தொடர்பாக மாவட்டம் மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்படி விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பில் 
கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் உட்பட பிரதேச செயலக பதவி உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டமானது பிற்பகல் 5.30 மணியளவில் நிறைவு பெற்றது.
 
dcc1dcc2dcc3dcc4dcc5dcc6dcc7dcc8
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின  நிகழ்வு இன்று (04.02.2025) காலை 8.04 மணிக்கு வலி மேற்கு பிரதேச செயலகம் சங்கானையில் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது
 
இந் நிகழ்வானது  தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதேச செயலகத்தில் அருகில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடு இடம் பெற்றது அத்துடன் சிரமதானமும் மூலிகை மரக்கன்றுகள் நடுதலும் இடம்பெற்றது. மேலும் J/ 180 சங்கானை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் கிராம மட்ட அலுவலர்கள், கலாசார  மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடு கையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 இதில் பெருமளவான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
 
I1I2I3I4I5I6I7I8

News & Events

10
ஆக2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
ஆக2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
ஆக2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
ஜூலை2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
ஜூலை2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
ஜூன்2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top