வலிகாமம் மேற்குச் சங்கானைப் பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழாவானது இன்று புதன்கிழமை மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

 
உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவில் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.
பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தப்பட்ட இவ் விழாவில் உத்தியோதர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
 
123456789101114
வலிகாமம் மேற்குச் சங்கானைப் பிரதேச செயலகத்தின் புதுவருட நிகழ்வும் 2026 ஆம் ஆண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
 
பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் அரச சேவை சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும்
பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு செயலகம் முன்றலில் நடைபெற்றது. 
 
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் சத்தியபிரமாணம் எடுக்க நிகழ்வு இடம்பெற்றது .
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட புத்தாண்டு கேக் வெட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
உத்தியோகத்தர்களுக்கு விசேட மாக சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது.அத்துடன் இவ்வாண்டுக்கான நாட் குறிப்பேடும் வெளியிடப்பட்டது.
அனைவரும் புத்தாண்டினை சிறப்பாக வரவேற்று தங்கள் கடமைகளை இனிதே இன்று ஆரம்பித்தனர்.
 
10002000701000200072100020007110002000731000200074100020007710002000781000200079

வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய 2025 ஆம் ஆண்டுக்கான பண்பாட்டு பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை 22/08/2025 பிற்பகல் 2.00 மணிக்கு அராலி இந்துக்கல்லூரியில் மிக சிறப்பாக இடம் பெற்றது.

திருமதி கவிதா உதயகுமார், பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்ற மேற்படி கலாச்சார விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் ச.ஜயந்தனும் கௌரவ விருந்தினராக திருமதி வி.சுகுணாளினி சிரேஷ்ட கலாசார உத்தி உத்தியோகத்தர் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம் ந.சிவானந்தன் அதிபர் அராலி இந்துக்கல்லூரி மற்றம் தி.விஜயசிறி சிற்பக் கலைஞர் அராலி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அராலி முருகமூர்த்தி ஆலயத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பண்பாட்டு பெருவிழா பவனியில் கலை கலாச்சாரங்களை தாங்கிய பல அம்சங்கள் இடம்பெற்றன.
மங்கள இசை முழங்க பேரிகை தபேலா தம்பட்டம் கிராமிய நடனங்கள், கிராமிய பாடல்கள், மாட்டு வண்டிகளின் ஊர்வலம், சிறுவர்களின் நாட்டிய நாடகங்கள், வினோத உடை உட்பட பல அம்சங்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து சிறப்பித்தன.

இந்தப் பண்பாட்டு பெருவிழாவில் மறைந்த அமரர் மாணிக்கம் ஏரம்பு , நாடக கலைஞர் அவர்கள் நினைவு கூரப்பட்டு அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

அத்துடன் மூத்த கலைஞர்கள் மற்றும் இளங்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பெருந்திரளான மக்கள் பங்கேற்ற விழாவாக அமைந்திருந்தமை சிறப்பிற்குரிய விடயமாகும். அத்துடன் இவ்விழாவானது கிராம மட்ட அமைப்புக்களின், பொது மக்களின் நலன் விரும்பிகளின் அனுசரனையுடனும் பங்களிப்புடனும் நடைபெற்றமை பெருமைக்குரிய விடயமாகும்.

மிகவும் சிறப்பாக இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான பண்பாட்டுப் பெருவிழாவில் கலைஞர்கள், ஊர்மக்கள், நலன் விரும்பிகள், பொது அமைப்புகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பண்பாட்டு விழாவை சிறப்பித்தனர்.

 IMG 2824f24bcac0 2da5 42c5 bb4f d63468cf901cf7d6c967 d04a 472e 85e3 8731622b7116de30a8bd 8132 4057 90ce bcabb9c200bd8fc1476e 6d80 4173 9f62 1ab5241c1d748c83b035 8076 4c7e 83be 8bb0deb845e5d77f7dd6 db25 4d64 954a eb03abe00c34c73f543f 6c57 4459 8e7d 51ce9981a33ab1a0f6fb 008a 4767 b9f3 fce592dfec3ad1e0a06e db8f 4842 a518 3caf73646573605c5516 7769 440a 963d 5a04f504442e29b10a1f 8171 453c 89d1 5241b3df5848

 

யாழ்.மாவட்ட செயலகமும் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை இன்று செவ்வாய்க்கிழமை(16/09/2025) காலை 8:30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
முன்னதாக பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் ஆரம்பமான மேற்படி நடமாடும் சேவை முகாமில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கௌரவ Dr.சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா ,வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் கௌரவ ச.ஜெயந்தன் ,மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன் ,உதவி மாவட்ட செயலாளர்,மாவட்ட செயலக பிரதம கணக்காளர்,உட்பட மாவட்ட,பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நடமாடும் சேவை முகாமை ஆரம்பித்து வைத்தனர்.
இதில் மொத்தமாக 1130 பொது மக்கள் பயன்பெற்றுக்கொண்டனர்.
இந்த நடமாடும் சேவை முகாமில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் ,(தேசிய அடையாள அட்டை) ,
ஓய்வூதியம் தொடர்பான சேவைகள் ,பிறப்பு இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ் தொடர்பான சேவைகள் ,மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதி பத்திரம் தொடர்பான சேவைகள் , பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகள் ,பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் ,மனித வள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் ,மற்றும் தொழில் வழிகாட்டல்கள் திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் கல்வி வழிகாட்டல்கள்,(NVQ)சமூக சேவை பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் ,முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள் ,காணி தொடர்பான சேவைகள் ,மருத்துவ முகாம் ,பொது மருத்துவ பரிசோதனை,கண்புரை பரிசோதனை (Cataract) மற்றும் இலவச மூக்கு கண்ணாடி வழங்குவதற்கான மருத்துவ சான்றிதழ் சேவைகளும் இடம்பெற்றன.
 
548149857 788130583964551 954249778520992517 n548021999 788132060631070 3902643987618033446 n548377466 788132737297669 3716028175369347731 n547394299 788131627297780 2264503123194096208 n548805093 788132573964352 3005710546317772253 n548108198 788133073964302 4990907189588874613 n548123468 788139207297022 7346690701843926399 n548620746 788139713963638 3499548932567744102 n548872950 788139497296993 231992840955335587 n548814512 788142053963404 8117298832150446119 n547757902 788139617296981 1709587661751127630 n549609416 788143397296603 4608292403325637278 n548123473 788139590630317 4078707531522362892 n547868973 788141630630113 5856315521623323229 n548865721 788140797296863 3630531450581016840 n546589021 788142893963320 1822296461006176466 n

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் கலாலய மன்றம் மற்றும் முத்துமாரி அம்மன்  அறநெறிப் பாடசாலையில் கடந்;த 22.12.2023 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மாலை 03.00 மணிக்கு கலாசரா அபிவிருத்தி உத்தியோகத்தர்  இந்துசமய கலாசரா அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் மாணவர்களின்   பங்குபற்றலுடன் மங்கள விளக்கேற்றல் மற்றும்   இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது தொடர்ந்து தொல்புரம் கலாலய கலைஞர்கள் மற்றும் தொல்புரம் முத்துமாரியம்மன் அறநெறி மாணவர்களின் பேச்சு, கவிதை, நடனம் போன்ற கலைநிகழ்வுகள் இனிதே நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது.

Event 01  Event 02  Event 03  Event 04

News & Events

10
ஆக2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
ஆக2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
ஆக2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
ஜூலை2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
ஜூலை2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
ஜூன்2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top