மேற்படி நிகழ்வானது இம்மாதம் 16ம் திகதி மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இடம் பெற்றது. போதைத்தடுப்பு, உளவளத்துணை மற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்களினால் இக்கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பதிவுகள் சில...



சங்கரத்தை (J/159) பிரிவில் இன்று (2023.11.15) மருத்துவ முகாம் நடை பெற்றது. வட்டு பிரதேச மருத்துவமனையின் மருத்துவர், பணியாளர்கள் மற்றும் இக்கிராமத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர் ஆகியோரின் பங்களிப்புடன் கொட்டும் மழையின் மத்தியிலும் இந்த மருத்துவ முகாம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின் பதிவுகள் சில...

வலி மேற்கு சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டு தெற்கு J/165 கிராம அலுவலர் பிரிவில் உள்ள இன்பச்சோலை எனும் கிராமத்தில் அவங்கலங்கா நிதியத்தின் (Avanka Lanka foundation) "Love Jaffna" திட்டத்தினுடாக புதிதாக அமைக்கப்பட்ட மற்றும் புனரமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இம்மாதம் 2 ஆம் திகதி இடம் பெற்றது.
இவ் நிகழ்விற்கு வலி மேற்கு பிரதேச செயலாளர்,பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், குறிப்பிட்ட நிறுவனத்தின் இயக்குனர், அப்பகுதி கிராம உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் 3 புனரமைக்கப்பட்ட வீடுகளும் 1 புதிய வீடும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, சங்கானை பிரதேச செயலக முதியோர் மேம்பட்டு பிரிவினர் மற்றும் முதியோர் சங்கம் ஆகியோர் இணைந்து முதியோர் தினத்தை இம்மாதம் 2 திகதி கொண்டாடினர். இந்நிகழ்வில் 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பரிசில்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டதுடன் 10 குழந்தைகளுக்கு மேல் பெற்ற முதிய பெண்மணிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் முதியவர்களுக்கான நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வின் பதிவுகள் சில...









சங்கானை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைத்தொழிலாளர்களுக்கு சந்தைப்படுத்தல் வசதியினை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக வலிகாமம் மேற்கு பிரதேச செயலக கைத்தொழில் பிரிவினால் 2023.11.02 மற்றும் 2023.11.03 ஆகிய இரு தினங்களும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் விற்பனைக்கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டது. இங்கு குறிப்பாக பாரம்பரிய உணவு மற்றும் ஏனைய உள்ளுர் உற்பத்திப் பொருட்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கொள்வனவு செய்து பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.


















