
2023/24 இல் 15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2023 இன் பிற்பகுதியில் தொடங்கும். அதைத் தொடர்ந்து 2024 இல் கணக்கெடுப்பு கட்டம் தொடங்க உள்ளது.இந்த ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2023.10.13 தொடக்கம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் குறிப்பிடத்தக்க அம்சம், தரவு சேகரிப்பிற்காக பாரம்பரிய அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டேப்லெட் கணினிகளை இணைத்துள்ளது. 150 ஆண்டுகளுக்கும்மேலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைகிறது.
மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் ஒரு நாட்டிற்குள் இருக்கும் அனைத்து தனிநபர்கள் மற்றும் தற்போதுள்ள குடியிருப்புகளின் விரிவான எண்ணிக்கையை உள்ளடக்கியது. எந்தவொரு நபரும் அல்லது குடியிருப்பும் தவிர்க்கப்படுவதை அல்லது இரண்டு முறை கணக்கிடப்படுவதை செயல்முறை உறுதி செய்கிறது. மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு கிராம அலுவலர் பிரிவு மட்டம் வரை மக்கள் தொகை மற்றும் வீட்டுத் தகவல்களைப் பெறுவதற்கான அதிகாரப்பூர்வ தரவுகளின் முக்கிய ஆதாரமாகும்.
இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, சுமார் 16,000 அரசுத் துறை ஊழியர்கள் கணக்கெடுப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள், பட்டியலிடப்பட்ட நிலையில் ஏற்கனவே பிரதேச செயலக மட்டத்தில் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்துவிதமான நலன்புரி கொடுப்பனவுகளும் கீழ் காணப்படும் விதி முறையின் கீழ் இனி வழங்கப்படும்.

மேற்குறித்த நிகழ்வானது சங்கானை பிரதேச செயலகம் மற்றும் World Vision நிறுவனத்தின் ஏற்பாட்டில் 02.06.2023 அன்று காலை 9.00 மணியளவில் சங்கானை பிரதான பஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறுவர் கழகங்களை சேர்ந்த சிறுவர்கள் World Vision மற்றும் இதம் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் கிராமங்களில் இருந்து அழைத்துவரப்பட்டனர்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

23.06.2023 வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஜனசபை செயலகத்தினால் ஜனசபை முறை தொடர்பில் நிகழ்நிலை (Zoom) ஊடாக தெளிவுபடுத்தல் செயலமர்வு நடைபெற்றது.இவ் செயலமர்வில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்(அபிவிருத்தி) மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வட பகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமர்வு 20.05.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்செயலமர்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ. ஜெயசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்ததோடு பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.
வடபகுதியில் கறுவா செய்கையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதற்கான செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டதுடன் ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக கறுவா கன்றுகளும் வழங்கப்பட்டது.














