
நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் எண்ணீட்டுக் கள உத்தியோகத்தர்களுக்கான அஸ்வசுமா மொபைல் அப் (Aswasuma Mobile App ) தொடர்பான பயிற்சி நெறியானது 13.12.2022 ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டு இத்திட்டத்தினை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தும் வகையிலும் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் தரவுகளை இலகுவாக தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் நோக்கிலும் அஸ்வசுமா மொபைல் ஆப் தொடர்பான பயிற்சி நெறி இடம் பெற்றது.
இந்நிகழ்வில் எண்ணீட்டுக் கள உத்தியோகத்தர்களான கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.


சங்கானை பிரதேச செயலகத்தின் சிறு தொழில் அபிவிருத்தி பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இளம் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு நிகழ்வானது (Young Entrepreneurship Motivation program) 2022.11.18 அன்று சங்கரத்தை ரட்ணசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வின் பதிவுகள் சில...



அரசஅதிபர் வெற்றிக்கிண்ண போட்டித்தொடரில் எமது பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்கள் பிரிவு கரப்பந்தாட்ட அணி வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது. இவ் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது பிரதேச செயலக நவராத்திரி விழா 03.10.2022 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் உத்தியோகத்தர்களுக்குக்கான கோலப்போட்டி, மாலை கட்டுதல், தோரணம் கட்டுதல் போட்டிகள் இடம்பெற்று பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளில் 5ம் தர புலமைப்பரில் சித்தியடைந்த மாணவர்கள், உயர் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.






க.பொ.த சாதாரண தரத்துடன் பாடசாலை இடைவிலகிய மாணவர்களுக்காக எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினரால் நடாத்தப்பட்ட தொழிலுக்கான திறவுகோல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்வுகள் கடந்த 21ம் மற்றும் 27ம், 28ம் திகதிகளில் நடைபெற்றது.
அந்நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் சில...

















