சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்குடன் தேசிய தொழில்முயற்சி அதிகார சபையின் (NEDA) ஏற்பாட்டில் தொழில்முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கு தடையாக காணப்படும் காரணிகளுக்கு தீர்வு காணும் முகமாக 29.11.2023 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் தொழில்முயற்சியாளர் மன்றமானது நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர், வங்கி முகாமையாளர்கள், NEDA மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக அதிகாரிகள்  உத்தியோகத்தர்கள் மற்றும் தொழல்முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகள் பல தீர்வு காணப்பட்டதுடன் தீர்க்க முடியாத பிரச்சினைகள் மாவட்ட தொழில் முயற்சியாளர் மன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.

SEDC  SEDC 2

SEDC3  SEDC4

சங்கானை பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி நிகழ்வானது இம்மாதம் 21 ம் திகதி எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக கணக்காளரின் தலைமையில் இடம்பெற்றது.

கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து, 18 வயதின் கீழ் நீர் நிரப்புதல், 18 வயதின் மேல் நீர் நிரப்புதல் , 18 வயதின் மேல் பொது அறிவுப் போட்டி, செயற்கைக் கால் உடையவர்களுக்கான சங்கீத கதிரை மற்றும் விழிப்புலன் அற்றோருக்கான முட்டி உடைத்தல் போன்ற விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் பதிவுகள் சில...

SSU 05 SSU 02 SSU 12 SSU 07 SSU 01 SSU 04 SSU 06

SSU 08 SSU 10 SSU 11 SSU 03 SSU 09

மேற்படி நிகழ்வானது இம்மாதம் 16ம் திகதி மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இடம் பெற்றது. போதைத்தடுப்பு, உளவளத்துணை மற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்களினால் இக்கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பதிவுகள் சில...

IMG 3db851084f927d6fe0c439778bded028 VIMG 1858d3a01024eb3c0f96e189711c8029 VIMG f20c8195c92be4893b002090ed7fc9fb V

UNDP நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் CFCD  நிறுவனத்தினால் வலி மேற்கு சங்கானை பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் 'நிலைபேறான மீள்குடியேற்றம், மீள் ஒருங்கிணைவிற்கான விரிவாக்கப்பட்ட ஆதரவு' எனும் திட்டத்தின் கீழ் மீள் குடியமர்ந்தவர்களிற்கான வாழ்வாதாரம் வழங்கும் திட்டத்தில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு 15.11.2023 அன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச செயலாளர், பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், UNDP, CFCD ஆகிய நிறுனங்களின் திட்ட இணைப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்¸ பிரதேச செயலக தன்னார்வ நிறுவனங்களின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்¸ பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

UNDP 01    UNDP 02

UNDP 03    UNDP 04

சங்கரத்தை (J/159) பிரிவில் இன்று (2023.11.15) மருத்துவ முகாம் நடை பெற்றது. வட்டு பிரதேச மருத்துவமனையின் மருத்துவர், பணியாளர்கள் மற்றும் இக்கிராமத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர் ஆகியோரின் பங்களிப்புடன் கொட்டும் மழையின் மத்தியிலும்  இந்த மருத்துவ முகாம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின் பதிவுகள் சில...

IMG 091e3311f5e9616f56c8a64606bad12c V  MC  IMG 91e25ec8faca5229d69c43dc0a3cad5e V

News & Events

10
අගෝ2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
අගෝ2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
අගෝ2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
අගෝ2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

Scroll To Top