children

 

மேற்குறித்த நிகழ்வானது சங்கானை பிரதேச செயலகம் மற்றும் World Vision நிறுவனத்தின் ஏற்பாட்டில்  02.06.2023 அன்று காலை 9.00 மணியளவில் சங்கானை பிரதான பஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறுவர் கழகங்களை சேர்ந்த சிறுவர்கள் World Vision மற்றும் இதம் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் கிராமங்களில் இருந்து அழைத்துவரப்பட்டனர்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

cinnamon

 

வட பகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமர்வு 20.05.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றது. 

இச்செயலமர்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ. ஜெயசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்ததோடு பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். 

வடபகுதியில் கறுவா செய்கையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதற்கான செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டதுடன் ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக கறுவா கன்றுகளும் வழங்கப்பட்டது.

 

women

 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தில்,  "பெண்களின் திறமைகளை வலுவூட்டுவதன் ஊடாக சமூகத்தில் பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தி பெருமைக்குரியவர்களாக உருவாக்குதல்" எனும்  தொனிப்பொருளில் தேவை நாடும் மகளிர் அமைப்பு (WIN), இதம் நிறுவனம், உலக தரிசன நிறுவனம் (World Vision) மற்றும் சமூக மாற்றத்துக்கான போராட்ட இயக்கம் ஆகியோரின் அனுசரணையுடன் பெண்கள் அபிவிருத்திப் பிரிவினரால் நடாத்தப்பட்ட  மகளிர் தின நிகழ்வு 24.03.2023 அன்று மு.ப 9.30 மணியளவில்  நடைபெற்றது. இந்நிகழ்வானது எமது பிரதேச செயலாளர் திருமதி. பிறேமினி பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

tamil new year

 

சோபகிருது தமிழ் புத்தாண்டிற்கான கைவிஷேசம் வழங்கும் நிகழ்வு இன்று (17.04.2023) எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. பிறேமினி பொன்னம்பலம் அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு கைவிஷேசம் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

flag

 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75வது சுதந்திர தின நிகழ்வு (04.02.2023) காலை 8.20 மணிக்கு எமது பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுக்காக நடை பெற்ற போட்டிகளுக்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும், சுதந்திர தினத்தினை முன்னிட்டு  எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டது.

 

News & Events

10
අගෝ2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
අගෝ2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
අගෝ2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
අගෝ2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
ජූලි2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
ජූලි2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
ජූනි2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

Scroll To Top