சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது உலகெங்கிலும் டிசம்பர் மாதம் 3ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி 'இதம்' நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று 08.12.2021 அன்று காலை 9.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது பிரதேச செயலர் கலந்து கொண்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் சில..





தொழில் வழிகாட்டல் வாரமானது, 2021.10.04 தொடக்கம் - 2021.10.10 வரை கடைப்பிடிக்கும் முகமாக பாடசாலை மட்டத்தில் தரம் 9, 10, 11 மாணவர்களுக்கு கவிதை, சித்திரம், பேச்சு, வினாடிவினா போட்டி என்பன நிகழ்நிலை மூலமாக (Zoom) நடாத்தப்பட்டு பிரதேச மட்ட நிலைகளுக்கான சான்றிதழ்களும் பங்கு மற்றும் பற்றியமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


"தொழிற் சவாலை வெற்றி கொள்ளல்" எனும் தொனிப்பொருளில் தொழில் தேடுவோருக்காக மனிதவள அபிவிருத்திப் பிரிவினரால் 2021.08.10 அன்று நடாத்தப்பட்ட நிகழ்வில் சுமார் 25 வரையானோர் கலந்து கொண்டனர்.

மாற்று திறனாளிகள் வேலை /தொழில் ஒன்றை செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 2021.11.09 அன்று பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் மனிதவள அபிவிருத்தி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. இதில் மட்டுப்படுத்தபட்ட அளவினர் கலந்து கொண்டனர்.
எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினரால் சுயதொழில் புரிவோரை ஊக்குவிக்கும் முகமாக 2021.07.13 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டுப் படுத்தப்பட்ட அளவில் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.















