ஜனாதிபதி நிதியம்
மருத்துவ கொடுப்பனவு மற்றும் மருத்துவம் அல்லாத கொடுப்பனவுகளுக்கான
விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவுறுத்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள,
கீழே காணப்படும் QR Code-ஐ Scan செய்யவும்.QR CODE
மருத்துவ கொடுப்பனவு விண்ணப்ப படிவம்
மருத்துவ கொடுப்பனவுக்கான அறிவுறுத்தல் பத்திரம்
மருத்துவம் அல்லாத கொடுப்பனவுக்கான படிவம்
மருத்துவம் அல்லாத கொடுப்பனவுக்கான அறிவுறுத்தல் பத்திரம்
இணையத்தளம்தேவையான விண்ணப்பப்படிவங்களையும் அறிவுறுத்தல்களையும் எளிதாகப் பெற்றுக்கொள்ள QR Code-ஐ Scan செய்யுங்கள்.

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலர் பிரிவில் பொது மக்களின் சிறப்பான பங்களிப்புடன் இடம் பெற்றது.
இந்த தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று சனிக்கிழமை (8.8.2026)வட்டு வடக்கு J/158 கிராம அலுவலர் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ S.ஶ்ரீபவானந்தராஜா அவர்கள் கலந்து கொண்டு இந்த திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.
இதேவேளை சம நேரத்தில் மற்றைய 25 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் வீதிகள் ,குளங்கள் ,வாய்க்கால்கள் ,பாடசாலைகள் முன்பள்ளிகள் ,பொது மண்டபங்கள்,உட்பட பல இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் பொதுமக்கள் ,பொது அமைப்புக்கள் ,நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பினை வழங்கினர்.
"அத்தம " தேசிய வேலை திட்டத்தில் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி இலக்கியா ஜெயகரன் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது,




"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய செயற்திட்டத்தின் கீழ் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தில் நேர்மை வாரத்தின் 5ம் நாளான நேற்றையதினம் (3107.2026) டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் இணைந்து மேற்கொண்டனர்




















