சங்கானை பிரதேச செயலக பதிவாளர் கிளையின் நடமாடும் சேவையானது CFCD நிறுவனத்தின் அனுசரணையுடன் 22.12.2023 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் காலம் கடந்த பிறப்பு பதிவு (19), இறப்பு பதிவு (04), பதிவு செய்யப்பட்ட விவாகம்(04), பிறப்பு சான்றிதழ் திருத்தம்(06) போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.


இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறிப் பாடசாலையில் கடந்த 15.12.2023 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மாலை 03.00 மணிக்கு சுழிபுரம் மேற்கு ஜயனார் ஆலய மண்டபத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் குருபூசை நிகழ்வு இந்துசமய கலாசரா அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு த.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இந்துசமய கலாசரா அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அஜிதா கோபிநாத் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இளம் சைவப்புலவர் திரு ச.நவநீதன் அவர்களின் சொற்பொழிவும் அந்நிகழ்விலே வினாக்கள் கேட்கப்பட்டு விடையளித்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிக்கப்பட்டதுடன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் பேச்சு, கவிதை, நடனம் போன்ற கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

சங்கானை பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி நிகழ்வானது இம்மாதம் 21 ம் திகதி எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக கணக்காளரின் தலைமையில் இடம்பெற்றது.
கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து, 18 வயதின் கீழ் நீர் நிரப்புதல், 18 வயதின் மேல் நீர் நிரப்புதல் , 18 வயதின் மேல் பொது அறிவுப் போட்டி, செயற்கைக் கால் உடையவர்களுக்கான சங்கீத கதிரை மற்றும் விழிப்புலன் அற்றோருக்கான முட்டி உடைத்தல் போன்ற விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் பதிவுகள் சில...


சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்குடன் தேசிய தொழில்முயற்சி அதிகார சபையின் (NEDA) ஏற்பாட்டில் தொழில்முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கு தடையாக காணப்படும் காரணிகளுக்கு தீர்வு காணும் முகமாக 29.11.2023 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் தொழில்முயற்சியாளர் மன்றமானது நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர், வங்கி முகாமையாளர்கள், NEDA மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழல்முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகள் பல தீர்வு காணப்பட்டதுடன் தீர்க்க முடியாத பிரச்சினைகள் மாவட்ட தொழில் முயற்சியாளர் மன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.


UNDP நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் CFCD நிறுவனத்தினால் வலி மேற்கு சங்கானை பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் 'நிலைபேறான மீள்குடியேற்றம், மீள் ஒருங்கிணைவிற்கான விரிவாக்கப்பட்ட ஆதரவு' எனும் திட்டத்தின் கீழ் மீள் குடியமர்ந்தவர்களிற்கான வாழ்வாதாரம் வழங்கும் திட்டத்தில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு 15.11.2023 அன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச செயலாளர், பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், UNDP, CFCD ஆகிய நிறுனங்களின் திட்ட இணைப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்¸ பிரதேச செயலக தன்னார்வ நிறுவனங்களின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்¸ பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
















