ADR

இலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் ,  திருமணச்சான்றிதழ்  , இறப்புச் சான்றிதழ்  ஆகியவற்றை சங்கானைப் பிரதேச செயலகத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29.05.2019 முதல் இச்சேவையானது மதிப்பிற்குரிய பிரதேசசெயலாளர் திருமதி.பொ.பிரேமினி அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

1

DSC02838

நிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதைக் குறைத்துக்கொள்ளல்.

உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் வலிகாமம் மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.06.2019 அன்று வலிகாமம் மேற்கு பிரதேச செயலக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.பொ.பிரேமினி அவர்களின் தலைமையில் உலக தரிசன நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தமது தலைமை யுரையில் குறிப்பிடுகையில்,

1973 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5 ஆந் திகதி உலக சுற்றாடல் தினம் ஐக்கிய நாடுகள்சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் இந்த வருடத் தொனிப்பொருளாக “நிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதைக் குறைத்துக்கொள்ளல்” என்பதாகும்.

பஞ்சபூதங்களான இயற்கையுடன் ஒன்றிணைந்து அவற்றுக்கு கெடுதல் செய்யாமல் எமது வாழ்க்கையை அமைப்பதே சிறப்பானது. சங்கானைப் பிரதேச செயலகம் கூடியளவு கடற்கரையைக் கொண்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் கடற்கரை மணல் அகழ்வதும் , கடற்கரையில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதும் இச்சூழல் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகின்றது. அண்மையில் சுழிபுரம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மரங்கள் பல அழிவடைந்தது.

தற்போது கைத்தொழில் மயமாக்கல் காரணமாக சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. கூடிய அளவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதும் இதற்கான காரணமுமாகும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச செயலகத்தினால் வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் புதிய மரங்கள் நாட்டப்பட்டு தொடர்ந்து பாராமரிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய உலக தரிசன நிறுவன முகாமையாளருக்கு நன்றிகளை தெரிவித்தார்.

அத்துடன் இந்நிகழ்வில் உலக தரிசன நிறுவன முகாமையாளர்; தெரிவிக்கையில்,

1973 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட இவ் உலக சுற்றாடல் தின நிகழ்வு 46 ஆண்டுகள் கடந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளில் கொண்டாடிவருகின்றோம். அத்துடன் உலக புள்ளிவிபரங்களின் பிரகாரம் அதிக மக்கள் தூய வளியைச் சுவாசிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். அத்துடன் இச்சுற்றாடல் மாசடைவின் காரணமான அதிகளவான மரணங்கள் நிகழ்கின்றன.

வளங்களை சரியான முறையில் பயன்படுத்தாமை எதிகால சந்ததியினருக்கு நாம் செய்யும் துரோகமாக அமையும்.

சொப்பிங் பாக் ஐ நிலத்தில் போடுவதால் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றது.

முன்னோர்கள் அக்காலத்தில் எப்போது மழைவரும் , காற்றடிக்கும் போன்ற சரியாக இயற்கை எதிர்வுகூறல்களை கூறினார்கள் . இக்காலத்தில் எம்மால் இப்படிக் கூறவியலாது. நாம் செய்யும் தவறுகள் காரணமாக எதையுமே திட்டமிட்டுக் கூறமுடியாதுள்ளது. தற்போது இயற்கை எமக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. நாங்கள் ஒவ்வொருவருமே இதற்கு காரணமாக இருக்கின்றோம்.

கடந்த காலத் தரவுகளை நோக்கினால் மழை வெள்ளத்தை விட வரட்சி என்பது பாரிய தாக்கமாக உள்ளது.

எனவே இச்சமுதாயத்திற்கு சுற்றாடலைப் பாதுகாப்பது தொடர்பாக பகிர்ந்து கொள்வதற்கு நீங்கள் ஊடகமாக இருக்க வேண்டுமெனவும், இயற்கையைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

அத்துடன் சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக் கல்வி மாணவர்களால் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வைத் தூண்டும் விதத்திலான தெருவெளிநாடகமும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து சுற்றாடல் விழிப்புணர்வு தொடர்பாக கிராமமட்ட உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இயற்கை உற்பத்தியை பிரதிபலிக்கும் கேடயங்களும் கூடைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 2
 3
 67
 11
 4

 

20190412 102053

இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை மேம்படுத்தும் நோக்குடன் 12.04.2019 அன்று அராலி கிழக்கு வீரபத்திரர் சனசமூகநிலையத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகள், தமக்குரிய தகைமை, ஆற்றல் மற்றும் ஆர்வத்திற்கேற்ப பொருத்தமான தொழில் துறையை இனங்காண்பதற்கான தேர்வு மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள், உள ஆற்றுப்படுத்தல் சேவைகள் என்பன இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தினை யாழ் மாவட்டச் செயலக மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் சங்கானைப் பிரதேச செயலக மனிதவள உத்தியோகத்தரும் இணைந்து மேற்கொண்டனர். இதில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

20190412 123052 
 20190412 105041
 20190412 123758

 

DSC02809

சிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பயனாளிகளுக்காக நடைமுறைப்படும் மனித உடலுக்கு தீங்கற்ற விதத்தில் இயற்கையான உரம் மற்றும் இயற்கையான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தில் ஈடுபடும் சமுர்த்திப் பயனாளிகளினை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்கனவே நடாத்தப்பட்ட விழிப்புணர்வுத் திட்டத்தினைத் தொடர்ந்து சங்கானைப் பிரதேசசெயலகப் பிரிவில் உள்ள 25 கிராம அலுவலர் பிரிவிலும் வீட்டுத்தோட்டத்தினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளில் சிறப்பாக மேற்கொள்ளும் ஒவ்வொருவர் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 5000 ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் சங்கானைப் பிரதேச செயலக பிரிவு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிக்குத் தலா ரூபா 20,000 ரூபா 15,000 ரூபா 10,000 பெறுமதியான காசோலைகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பிரதேச செயலக பிரிவில் உள்ள சிறப்பாக வீட்டுத் தோட்டத்தினை மேற்கொள்ளும் இளம் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கான காசோலைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் இவ்நிகழ்வில் மதிப்பிற்குரிய பிரதேசசெயலாளர் திருமதி.பொ.பிரேமினி அவர்கள் குறிப்பிடுகையில் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் அவர்களின் பல்வேறு செயற்திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இச்செயற்திட்டமானது ஆரம்பத்தில் சமுர்த்தி வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் கட்டம் கட்டமாக இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக, அவ்வீட்டுத் தோட்டத்தினை எவ்வாறு அப்பயனாளிகள் மேற்கொள்கின்றனர் என்பதை உத்தியோகத்தர்கள் பரிசீலித்து சிறந்தபயனாளிகள் இவ்ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது வரட்சியான காலம் எனினும் நீரைச் சேமித்து பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தினைச் சிறந்தமுறையில் மேற்கொண்டு சிறந்தவிளைவுகளைப் பெற்று அதனூடாக மேலதிக வருமானத்தினைப் பெற்று பயனடையவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இயற்கையான உரப்பாவனையுடன் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட களைநாசினிகளைப் பயன்படுத்துவது இவ்வீட்டுத்தோட்டப் போட்டியின் முக்கிய அம்சமாகும்.

இச்சமுர்த்திப் பயனாளிகளுக்காக நடாத்தப்படும் சிறந்த பயனாளிகளை கிராம , பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்றது போல் மாவட்ட , மாகாண தேசியமட்டங்களிலும் இவ்வாறான போட்டிகள் நடாத்தப்படவுள்ளமையும் அதில் தெரிவு செய்யப்படுவோருக்கு பெறுமதியானதொகை காசோலைகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

News & Events

10
ஆக2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
ஆக2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
ஆக2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
ஆக2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

குடியுரிமை சாசனம்

Scroll To Top