எமது பிரதேச செயலக நவராத்திரி விழா 03.10.2022 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் உத்தியோகத்தர்களுக்குக்கான கோலப்போட்டி, மாலை கட்டுதல், தோரணம் கட்டுதல் போட்டிகள் இடம்பெற்று பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளில் 5ம் தர புலமைப்பரில் சித்தியடைந்த மாணவர்கள், உயர் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.






அரசஅதிபர் வெற்றிக்கிண்ண போட்டித்தொடரில் எமது பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்கள் பிரிவு கரப்பந்தாட்ட அணி வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது. இவ் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பின்வரும் இணைப்பினூடாக பொதுமக்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள முடியும்: Click Here!

க.பொ.த சாதாரண தரத்துடன் பாடசாலை இடைவிலகிய மாணவர்களுக்காக எமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினரால் நடாத்தப்பட்ட தொழிலுக்கான திறவுகோல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்வுகள் கடந்த 21ம் மற்றும் 27ம், 28ம் திகதிகளில் நடைபெற்றது.
அந்நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் சில...



வட மாகாண தொழிற்துறைத் திணைக்களம் சிறுதொழில் அபிவிருத்திப் பிரிவு ஆகியவற்றின் அனுசரணையுடன் சங்கானை பிரதேச செயலகத்துடன் பேருந்து நிலையம் அருகில் புத்தாண்டு விற்பனை சந்தை 2022.04.18 (திங்கட்கிழமை) நடைபெற்றது.























