சங்கானை பிரதேச செயலக பதிவாளர் கிளையின் நடமாடும் சேவையானது CFCD நிறுவனத்தின் அனுசரணையுடன் 22.12.2023 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் காலம் கடந்த பிறப்பு பதிவு (19), இறப்பு பதிவு (04),  பதிவு செய்யப்பட்ட விவாகம்(04), பிறப்பு சான்றிதழ் திருத்தம்(06) போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.

ADR    ADR 01    ADR 02   ADR 04

ADR 05    ADR 06

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறிப் பாடசாலையில் கடந்த 15.12.2023 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மாலை 03.00 மணிக்கு சுழிபுரம் மேற்கு ஜயனார் ஆலய மண்டபத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் குருபூசை நிகழ்வு இந்துசமய கலாசரா அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு த.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இந்துசமய கலாசரா அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அஜிதா கோபிநாத் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இளம் சைவப்புலவர் திரு ச.நவநீதன் அவர்களின் சொற்பொழிவும் அந்நிகழ்விலே வினாக்கள் கேட்கப்பட்டு விடையளித்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிக்கப்பட்டதுடன்  அறநெறிப்பாடசாலை மாணவர்களின் பேச்சு, கவிதை, நடனம் போன்ற கலைநிகழ்வுகளில்  பங்குபற்றிய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

Navalar 01    Navalar 02    Navalar 04    Navalar 03

சங்கானை பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி நிகழ்வானது இம்மாதம் 21 ம் திகதி எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக கணக்காளரின் தலைமையில் இடம்பெற்றது.

கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து, 18 வயதின் கீழ் நீர் நிரப்புதல், 18 வயதின் மேல் நீர் நிரப்புதல் , 18 வயதின் மேல் பொது அறிவுப் போட்டி, செயற்கைக் கால் உடையவர்களுக்கான சங்கீத கதிரை மற்றும் விழிப்புலன் அற்றோருக்கான முட்டி உடைத்தல் போன்ற விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் பதிவுகள் சில...

SSU 05 SSU 02 SSU 12 SSU 07 SSU 01 SSU 04 SSU 06

SSU 08 SSU 10 SSU 11 SSU 03 SSU 09

சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்குடன் தேசிய தொழில்முயற்சி அதிகார சபையின் (NEDA) ஏற்பாட்டில் தொழில்முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கு தடையாக காணப்படும் காரணிகளுக்கு தீர்வு காணும் முகமாக 29.11.2023 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் தொழில்முயற்சியாளர் மன்றமானது நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர், வங்கி முகாமையாளர்கள், NEDA மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக அதிகாரிகள்  உத்தியோகத்தர்கள் மற்றும் தொழல்முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகள் பல தீர்வு காணப்பட்டதுடன் தீர்க்க முடியாத பிரச்சினைகள் மாவட்ட தொழில் முயற்சியாளர் மன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.

SEDC  SEDC 2

SEDC3  SEDC4

UNDP நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் CFCD  நிறுவனத்தினால் வலி மேற்கு சங்கானை பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் 'நிலைபேறான மீள்குடியேற்றம், மீள் ஒருங்கிணைவிற்கான விரிவாக்கப்பட்ட ஆதரவு' எனும் திட்டத்தின் கீழ் மீள் குடியமர்ந்தவர்களிற்கான வாழ்வாதாரம் வழங்கும் திட்டத்தில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு 15.11.2023 அன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச செயலாளர், பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், UNDP, CFCD ஆகிய நிறுனங்களின் திட்ட இணைப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்¸ பிரதேச செயலக தன்னார்வ நிறுவனங்களின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்¸ பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

UNDP 01    UNDP 02

UNDP 03    UNDP 04

News & Events

10
Aug2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
Aug2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
Aug2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
Aug2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
Jul2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
Jul2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
Jun2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

Scroll To Top