“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலர் பிரிவில் பொது மக்களின் சிறப்பான பங்களிப்புடன் இடம் பெற்றது.
இந்த தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று சனிக்கிழமை (8.8.2026)வட்டு வடக்கு J/158 கிராம அலுவலர் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ S.ஶ்ரீபவானந்தராஜா அவர்கள் கலந்து கொண்டு இந்த திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.
 
இதேவேளை சம நேரத்தில் மற்றைய 25 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் வீதிகள் ,குளங்கள் ,வாய்க்கால்கள் ,பாடசாலைகள் முன்பள்ளிகள் ,பொது மண்டபங்கள்,உட்பட பல இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
 
காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் பொதுமக்கள் ,பொது அமைப்புக்கள் ,நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பினை வழங்கினர்.
 
"அத்தம " தேசிய வேலை திட்டத்தில் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி இலக்கியா ஜெயகரன் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது,
 
 a1.1a1.2a1.3a1.4
"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய செயற்திட்டத்தின் கீழ் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச   செயலகத்தில் நேர்மை வாரத்தின் 5ம் நாளான  நேற்றையதினம் (3107.2026) டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும்  சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் இணைந்து மேற்கொண்டனர்
 
 s5.1s5.2s5.3s5.4
நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ பெருமாள் வித்தியாலயத்தில் மாணவர்களுக்காக "தனிமனித உயர் ஒழுக்கம் – நேர்மை" எனும் தலைப்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு மேற்கொள்ளப்பட்டது.
 
அதேவேளை, பாடசாலையில் கண்டெடுக்கப்பட்ட பணத்தொகையை எவ்வித தயக்கமும் இன்றி ஒப்படைத்து, நேர்மைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த மாணவன் பரிசு வழங்கி பாடசாலையால் கௌரவிக்கப்பட்டார்.
மேலும், நேர்மை தொடர்பாக மாணவர்களாலும் இந்நிகழ்வில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
 
 s3.1s3.2s3.3s3.4

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் “நேர்மையாக வாழ்வதன் பயன்கள் மற்றும் நேர்மையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.

s4.1s4.2s4.3s4.4

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் “தனிமனித ஒழுக்கத்தின் உயரிய பண்பு – நேர்மை” என்ற தலைப்பில் பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டன.
 
மேலும், நேர்மை வாரத்தை முன்னிட்டு சங்கானை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகமட்ட உறுப்பினர்களுக்கு தொடர்ந்து நேர்மை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 s2.1s2.2s2.3s2.4

News & Events

10
Aug2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
Aug2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் 5 ஆம் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்றைய தினம் பொன்னாலை வரதராஜ...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் விழிப்புணர்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, இன்று (30.07.2026 ) அராலி...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  மூன்றாம் நாள் நிகழ்வு

நேர்மை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  விழிப்புணர்வு நிகழ்வு

நேர்மை வாரத்தின் விழிப்புணர்வு நிகழ்வு

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தினால் நேர்மை வாரத்தின்...

10
Aug2026
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை

தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது...

10
Aug2026
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.

இலங்கையின் அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல்,...

16
Jul2026
செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் 2026

செயலக உத்தியோகஸ்தர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது    PSDG நிதித்...

16
Jul2026
அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026 

அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2026     அரச...

30
Jun2026
பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 2026

பிரதேச தொழில் சந்தை 135 பயன்பெற்றனர்   மனிதவலு...

Scroll To Top