
மேற்குறித்த நிகழ்வானது சங்கானை பிரதேச செயலகம் மற்றும் World Vision நிறுவனத்தின் ஏற்பாட்டில் 02.06.2023 அன்று காலை 9.00 மணியளவில் சங்கானை பிரதான பஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறுவர் கழகங்களை சேர்ந்த சிறுவர்கள் World Vision மற்றும் இதம் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் கிராமங்களில் இருந்து அழைத்துவரப்பட்டனர்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.














