
வட பகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமர்வு 20.05.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சனசமூக மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்செயலமர்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ. ஜெயசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்ததோடு பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.
வடபகுதியில் கறுவா செய்கையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதற்கான செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டதுடன் ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக கறுவா கன்றுகளும் வழங்கப்பட்டது.














