'பசுமையான ஒரு தேசம்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைப் புரட்சி- 2022 ஆரம்ப நிகழ்வானது 29.03.2022ம் திகதி எமது பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அராலி மேற்கு (J/ 160) கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலரின் தலைமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள்,விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய போதனாசிரியர், கிராம மட்ட உத்தியோகத்தர்களான கிராமஅலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரின் பிரதிநிதிகள், சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ளும் பொருட்டு அப்பிரதேச மதகுரு, சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,வீட்டுத் தோட்டப் பயனாளிகள், பொதுமக்கள்ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பிரதேச செயலாளர் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. சுமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து நாற்றுக்கள், விதைப் பொதிகள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ந்து வீட்டுத் தோட்ட பயனாளி ஒருவரின் இல்லத்தில் மு.ப. 9.18 மணிக்கு வடக்கு நோக்கி நாற்றுக்கள் நடப்பட்டன. மேலும் மதகுரு அவர்களின் ஆசிச் செய்தியை தொடர்ந்து பிரதேச செயலாளர், ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் உரை இடம்பெற்றது. விவசாய போதனாசிரியர் அவர்களினால் வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவரின் நன்றியுரையுடன் ஆரம்ப நிகழ்வு இனிது நிறைவு பெற்றது.
இவற்றின் பதிவுகள் சில.........




















