சிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பயனாளிகளுக்காக நடைமுறைப்படும் மனித உடலுக்கு தீங்கற்ற விதத்தில் இயற்கையான உரம் மற்றும் இயற்கையான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தில் ஈடுபடும் சமுர்த்திப் பயனாளிகளினை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்கனவே நடாத்தப்பட்ட விழிப்புணர்வுத் திட்டத்தினைத் தொடர்ந்து சங்கானைப் பிரதேசசெயலகப் பிரிவில் உள்ள 25 கிராம அலுவலர் பிரிவிலும் வீட்டுத்தோட்டத்தினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளில் சிறப்பாக மேற்கொள்ளும் ஒவ்வொருவர் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 5000 ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் சங்கானைப் பிரதேச செயலக பிரிவு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிக்குத் தலா ரூபா 20,000 ரூபா 15,000 ரூபா 10,000 பெறுமதியான காசோலைகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் பிரதேச செயலக பிரிவில் உள்ள சிறப்பாக வீட்டுத் தோட்டத்தினை மேற்கொள்ளும் இளம் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கான காசோலைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இவ்நிகழ்வில் மதிப்பிற்குரிய பிரதேசசெயலாளர் திருமதி.பொ.பிரேமினி அவர்கள் குறிப்பிடுகையில் மேன்மைதங்கிய ஜனாதிபதியின் அவர்களின் பல்வேறு செயற்திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இச்செயற்திட்டமானது ஆரம்பத்தில் சமுர்த்தி வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் கட்டம் கட்டமாக இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக, அவ்வீட்டுத் தோட்டத்தினை எவ்வாறு அப்பயனாளிகள் மேற்கொள்கின்றனர் என்பதை உத்தியோகத்தர்கள் பரிசீலித்து சிறந்தபயனாளிகள் இவ்ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது வரட்சியான காலம் எனினும் நீரைச் சேமித்து பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தினைச் சிறந்தமுறையில் மேற்கொண்டு சிறந்தவிளைவுகளைப் பெற்று அதனூடாக மேலதிக வருமானத்தினைப் பெற்று பயனடையவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இயற்கையான உரப்பாவனையுடன் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட களைநாசினிகளைப் பயன்படுத்துவது இவ்வீட்டுத்தோட்டப் போட்டியின் முக்கிய அம்சமாகும்.
இச்சமுர்த்திப் பயனாளிகளுக்காக நடாத்தப்படும் சிறந்த பயனாளிகளை கிராம , பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்றது போல் மாவட்ட , மாகாண தேசியமட்டங்களிலும் இவ்வாறான போட்டிகள் நடாத்தப்படவுள்ளமையும் அதில் தெரிவு செய்யப்படுவோருக்கு பெறுமதியானதொகை காசோலைகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.














