போதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப் பிரதேசசெயலகத்தில்; 03.04.2019 அன்றுபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் காலை 8.30 மணியளவில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி பொ.பிரேமினி அவர்களால் தேசியகொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கானைப் பிரதேசசெயலகத்தைச் சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும்; கலந்துகொண்டு போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவோம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அத்தோடு போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் விழிப்புணர்வு தொடர்பாக பிரதேச செயலாளர் அவர்கள் உரையற்றினார்.
.














