யாழ்.மாவட்ட செயலகமும் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை இன்று செவ்வாய்க்கிழமை(16/09/2025) காலை 8:30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
முன்னதாக பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் ஆரம்பமான மேற்படி நடமாடும் சேவை முகாமில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கௌரவ
Dr.சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா ,வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் கௌரவ ச.ஜெயந்தன் ,மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன் ,உதவி மாவட்ட செயலாளர்,மாவட்ட செயலக பிரதம கணக்காளர்,உட்பட மாவட்ட,பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நடமாடும் சேவை முகாமை ஆரம்பித்து வைத்தனர்.
இதில் மொத்தமாக 1130 பொது மக்கள் பயன்பெற்றுக்கொண்டனர்.
இந்த நடமாடும் சேவை முகாமில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் ,(தேசிய அடையாள அட்டை) ,
ஓய்வூதியம் தொடர்பான சேவைகள் ,பிறப்பு இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ் தொடர்பான சேவைகள் ,மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதி பத்திரம் தொடர்பான சேவைகள் , பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகள் ,பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் ,மனித வள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் ,மற்றும் தொழில் வழிகாட்டல்கள் திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் கல்வி வழிகாட்டல்கள்,(NVQ)சமூக சேவை பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் ,முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள் ,காணி தொடர்பான சேவைகள் ,மருத்துவ முகாம் ,பொது மருத்துவ பரிசோதனை,கண்புரை பரிசோதனை (Cataract) மற்றும் இலவச மூக்கு கண்ணாடி வழங்குவதற்கான மருத்துவ சான்றிதழ் சேவைகளும் இடம்பெற்றன.